Home இலங்கைநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குகளும் சிங்கள மக்களும் ஆர்ப்பாட்டம் :

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குகளும் சிங்கள மக்களும் ஆர்ப்பாட்டம் :

by admin

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் மணலாற்றில் இருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்து சென்ற பௌத்த பிக்குகள் தலைமை தாங்கி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியை, குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும்  இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும்  மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

#ஆர்ப்பாட்டம் #சிங்கள மக்கள் #செம்மலை நீராவியடி பிள்ளையார்

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More