Home உலகம்துபாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் 17 பேர் பலி

துபாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் 17 பேர் பலி

by admin

துபாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   நேற்று மாலை ஓமான் நாட்டு தலைநகரம் மஸ்கட்டிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் விபத்தின் போது பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுமுள்ளது

இது தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தில் பயணித்தவர்கள் ஓமானில் ரம்ழான் கொண்டாட்டங்களில் பங்குபற்றி விட்டு திரும்பிய போதே விபத்து ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

#dubai #accident   #dead #துபாயில்  ,வீதி விபத்தில் #பலி  #ரம்ழான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More