143
தாய்லாந்தில் பாரவூர்தி ஒன்று வான் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு தாய்லாந்தில் கிளெங் மாவட்டத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த பாரவூர்தியானது எதிரே வந்த வான் மீது மோதிக் கொண்டதனால் பாரவூர்தியும் வானும் தீப்பற்றிக் கொண்டதனால் இந்த அனர்த்தம் ஏற்பபட்டுள்ளது.
இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணம் செய்த 11 பேரும், வானில் சென்ற 14 பேருமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த வான் குறுக்கு வீதியைக் கடந்த போது கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீது மோதியதாக கூறப்படுகிறது.
Spread the love