Home இந்தியாவிபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் மீட்பு

விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் மீட்பு

by admin


கடந்த ஜூன் 3ஆம் திகதியன்று விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பகுதி ஜூன் 18ஆம் திகதியன்று அருணாசலப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இதிலிருந்து ஆறு பேரின் உடல்களும், ஏழு பேரின் எஞ்சிய பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்திய விமானப் படை ஆய்வு செய்து கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹாந்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப் படைத்தளத்தை நோக்கி பயணித்த நிலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

#விபத்து  #இந்திய விமானப் படை #உடல்கள் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More