Home பிரதான செய்திகள்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பேரவையின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பேரவையின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது

by admin

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பேரவை விடுத்த வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், இந்தியாவில் உள்ள மைதானங்களை சொந்த மைதானங்களாக கருதுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஆப்கானிஸ்தான் டேராடூனில் நடத்தியிருந்த நிலையில் இருபதுக்கு20 கிரிக்கெட் லீக்கை நடத்தி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பேரவை அதனையும் ; இந்தியாவில் உள்ள மைதானங்களில் நடத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் தாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்தி வருவதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

#ஆப்கானிஸ்தான்  #கிரிக்கெட்  #இந்திய கிரிக்கெட் வாரியம் #நிராகரித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More