156
ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் தொன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும்விதமாக, ஓகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
Spread the love