Home உலகம்புதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது..

புதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது..

by admin


அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியதனையடுத்து; அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு அதற்கான நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளர்h. இந்த புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ளது.

ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான எந்த வழியும் இல்லை என ஈரான் நாட்டின் ஐநா தூதர் மஜித் தாகத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த வியத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More