அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் மக்கள்தொகையின் வளர்ச்சி வீதம் பெரும் அளவில் குறையும் என வரவுசெலவுத்திட்டத்தினை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2021ஆம் ஆண்டில் முழு கருவள வீதம் எனப்படும் மகப்பேறு வயதுடைய பெண்களுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2.1 என்ற அளவைவிட குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள்தொகை அதிகரிக்கும் வேகம் குறைவதால் 2030களில் சில மாநிலங்களில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பா.ஜ.க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா #தசாப்தங்களில் #மக்கள்தொகை #வளர்ச்சி வீதம் ,