சிரியாவின் ரக்கா நகரில் 200 உடல்கள் அடங்கிய பாரிய மனிதப்புதைகுழி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கிய ரக்காவின் தென்பகுதியில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித புதைகுழியில் காணப்படும் ஐந்து உடல்களில் செம்மஞ்சல் நிற ஆடையை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பு தனது கைதிகளை கொலை செய்வதற்கு முன்னர் இந்த நிற ஆடைகளையே அவர்களை அணியச்செய்வது வழக்கம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்லால் எறிந்துகொல்லப்பட்ட மூன்று பெண்களின் உடல்களையும் காணமுடிகின்றது அவர்களின் தலைப்பாகங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் அமைப்பு 2014 இல் சிரியாவை கைப்பற்றி தனது தலைநகரமாக மாற்றியிருந்த நிலையில் 2017 இல் அமெரிக்கா சார்பு குழுக்கள் இந்த பகுதியை கைப்பற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது