Home உலகம் கலிபோர்னியாவில் 7.1 அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம்

கலிபோர்னியாவில் 7.1 அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம்

by admin

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் வீதிகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த நகரில் நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் இவ்வாறு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டபோதே, அதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #கலிபோர்னியா #கடுமையான #நிலநடுக்கம் #Californiaearthquake

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More