Home இலங்கைராஜபக்ஷ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015இல் தோற்கடிக்கப்பட்டனர்!

ராஜபக்ஷ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015இல் தோற்கடிக்கப்பட்டனர்!

by admin

ராஜபக்ஸ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை தோல்வியடையச் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் என்ற தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன இணங்காவிட்டால் தனித்து பயணிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைத்து அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள கூட்டணிக்கு ‘ ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன)  என்ற பெயருக்கு இருதரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். எனினும் பொதுஜன பெரமுன அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ராஜபக்ஸ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை தோல்வியடையச் செய்தார்கள். மீண்டும் அதே நிலைமையை உருவாக்க வாய்ப்பளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி #பொதுஜனபெரமுன #மஹிந்தராஜபக்ஸ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More