இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில், காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் காஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், பகல் 12 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. #அரசியல்கைதிகள் #மட்டக்களப்புகாந்தி பூங்கா #கவனயீர்ப்புஆர்ப்பாட்டம்

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link