ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா செயலிழந்துவிட்டது என ஹொங்கொஙகின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் மறுபடியும் சட்டசபையில் இதற்கான முயற்சிகளை அரசு தொடருமோ என சிலர் அரசின் மேல் சந்தேகப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர் அப்படி எதுவும் நடக்காது , அந்த மசோதா செயலிழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் இந்த மசோதா முழுவதுமாக திரும்பப்பெறப்பட்டது என எனத் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள் மசோதாவைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஹொங்கொஙகில் ; கலவரத்தை ஏற்படுத்திய குறித்த மசோதா ஏற்கனவே அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ஹொங்கொங் #சர்ச்சைக்குரிய #மசோதா #செயலிழந்து #கேரி லேம்