பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முள்ளிலையாவது தொடர்பான சர்ச்சைகளை அடுத்து தெரிவுக்குழுவில் தயாசிறி முன்னிலையாவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க முன்னிலையாகவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க போவதில்லை என தெரிவித்துவந்த தயாசிறி ஜயசேகர நேற்றும் இந்த விடயம் குறித்தும் பாராளுமன்றில் பேசியிருந்தார். இதன்போது சபாநாயகர் வழங்கிய தெளிவுபடுத்தலை அடுத்து தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாக இன்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடுகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தயாசிறி முன்னிலையாகிறார்…
162
Spread the love
previous post