171
முல்லைத்தீவு கேப்பாபுலவில், பாதுகாப்பு படைத் தலமையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5பேர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love