ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ருவிட்டரில் பதிவுகளை பகிர்ந்ததை தொடர்ந்து அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பேரழிவு நாட்டிலிருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென வகுப்பெடுக்கிறார்கள் என்னும் தொனியில் மூன்று ருவிட்டுக்களை டிரம்ப் பகிர்ந்திருந்தார்.
அவர் அந்தப் பதிவுகளில் நேரடியாக அந்த காங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்ற போதிலும் ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் உள்ளிட்ட காங்கிரஸ் பெண்களையே அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #டிரம்ப் #இனவெறி #குற்றச்சாட்டுகள்