சுரங்க பணி ஒப்பந்தத்தினை ரத்து செய்தமை தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு . 5.97 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் அதிகம் காணப்படுவதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் அங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த ‘டிசிசி’ என்கிற கூட்டு நிறுவனத்துக்கு ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்ததனையடுத்து அதனை எதிர்த்து, அந்நிறுவனம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதனை தொடர்ந்து, அந்த நிறுவனம் இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் நீதிமன்றுக்கு கொண்டு சென்ற நிலையில் பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் ‘டிசிசி’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உறுதி செய்யப்பட்டதனையடுத்து இவ்வாறு பாகிஸ்தான் அரசுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #பாகிஸ்தான் #டொலர்கள் #அபராதம் #பலுசிஸ்தான்