150
இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதியும் நியூயோர்க்கை வதிவிடமாகக் கொண்டவருமான தூதுவர் கேசேனுகா செனவிரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை நேற்று (15.07.19) இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்னவுடன், இராணுவ வெளிநாட்டு வரிசைப்படுத்தல் தொடர்பாகவும் வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்து உரையாடியதன் பின்பு இராணுவ தளபதியையும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love