குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியுமான துமிந்த சில்வா நோய்வாய்ப்பட்டிருப்பதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளினால் இது குறித்து நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளார் காவு வண்டி ஒன்றின் ஊடாக துமிந்த நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் சக்கர நாற்காலியில் வைத்தேனும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத அளவிற்கு அவர் சுகவீனமுற்றிருப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து விபர ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவினால் துமிந்தவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், துமிந்தவின் உடல் நிலை குறித்து சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகபூர்வ ஆவணங்களை எதனையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள மேலதிக நீதவான் அருனி ஆடிகல எதிர்வரும் 26ம் திகதி இது குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.