பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் 24.07.2019 அன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஹட்டன்நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தபோராட்டத்தில்தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள்,அரசியல்செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்முற்போக்குகூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கானஅமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.
ஆனால் இந்த விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. #நவீன் திஸாநாயக்க #ஹட்டனில் #ஆர்ப்பாட்டம் #பெருந்தோட்ட #மேலதிக கொடுப்பனவை
(க.கிஷாந்தன்)