Home இந்தியாஅதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது….

அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது….

by admin


இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று கையளித்துள்ளது. இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் நிறுவனம் முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தொகுப்பாக 4 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியது. அமெரிக்காவில் இருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் விமானப்படை தளத்தை அடைந்த இந்த ஹெலிகாப்டர்கள் விரைவில் விமானப்படையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.  இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் மற்ற ஹெலிகாப்டர்களும் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More