கொழும்பை அண்மித்த கொஹுவல- ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய, துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காயமடைந்த இருவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த ஜீப் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளாரென காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 38 வயதுடைய மாதிவலை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மற்றைய நபர், களுபோவில வைத்தியசாலையிலிருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் கொஹுவல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

