குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவ ராவ் உள்ளிட்டோரின் 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை நேற்றையதினம் முடக்கியுள்ளது. குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் ஆணையாளர் ஜோர்ஜ் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை வழக்கு நடந்த நேரத்தில் இவர்களின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருந்த நிலையில் மாதவ ராவ் உள்ளிட்ட மூவரின் 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன எனவும் அமுலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #குட்கா #சொத்துகள் #முடக்கம் #சோதனை