இந்தியாவிலுள்ள 10 நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச் சின்னங்களை உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பலரும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
நினைவுச் சின்னங்களை கண்டு ரசிக்க பார்வையாளர்களுக்குக் கூடுதல் நேரம் வழங்கும் நோக்கத்தில் இனி அதிகாலை சூரிய உதயப் பொழுதிலிருந்து இரவு 9 மணி வரையில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் மட்டுமே இந்த நினைவுச் சின்னங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது #நினைவுச் சின்னங்களை #பார்வையிடும் நேரம் #நீடிப்பு