160
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love