ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டு அங்கு இயல்பு நிலை வழமைக்கு திரும்பியதனையடுத்து இன்று பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதனையடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதுடன் ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அங்கு ஊரடங்குச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 நாட்களாக ஜம்முவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதனையடுத்து அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் நேற்று திரும்ப பெற்றுள்ளது.
144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதால் ஜம்முவில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #காஷ்மீரில் #144தடை#இயல்பு நிலை #பாடசாலைகள்