164
விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழக்க கருணாவின் பிரிவே பிரதான காரணமாகியது. இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார். இதனால் கிடைத்த வெற்றியை இன்று ராஜபக்ஸ குடும்பம் உரிமை கோருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவை இலகுவாக தோற்கடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கண்டி – குண்டசாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அதேபோன்று கோத்தபாயவை தோற்கடிக்க கூடிய ஒரு வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love