Home இந்தியாஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்

இலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்

by admin


இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தினமன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளததனயடுத்து கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள் மற்றும் புகையிரத் நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   #இலங்கை  #பயங்கரவாதிகள் #தமிழகத்திற்குள் #ஊடுருவல் #உயிர்த்த ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More