Home உலகம்அமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி

அமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி

by admin


அமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி எனவும், எதிர்வரும்; ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிரேசில் முழுவதும், குறிப்பாக அமேசன் பகுதிகளில், காட்டுத்தீ பற்றுவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. போல்சீனரோவின் அரசாங்கம் காடுகளை அழிக்க ஊக்குவிப்பதே இதற்கு காரணம் என சூழலியாளர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

பிரேசில் முழுவதும் இந்தாண்டு மட்டும், 75,000 முறை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது எனவும் 2018ல் 40,000 முறை ஏற்பட்டதை விட இது மிகவும் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமேசன்  #காட்டுத்தீ #சர்வதேச நெருக்கடி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More