Home இலங்கைசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒருவர் கைது

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒருவர் கைது

by admin


சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.

கல்முனை காவல்துறை பிரிவில் உள்ள 288ஷஏ மாரியம்மன் கோயில் வீதி பாண்டிருப்பு-2 பகுதி முகவரியாக கொண்ட தில்லைநாதன் ஆனந்தராஜ்(வயது-41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.  #சட்டவிரோத  #ஆயுதங்கள் #கைது
பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More