Home இலங்கைராஜஸ்தான் வாசிகளுக்கு 50 ஆயிரம் தண்டம்

ராஜஸ்தான் வாசிகளுக்கு 50 ஆயிரம் தண்டம்

by admin


இந்தியா ராஜாஸ்தானிலிருந்து சுற்றுலா நுழைவிசைவில் (VISA) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சுற்றுலா நுழைவிசைவில் வருகை தந்தனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அதனை அடுத்து குறித்த இந்தியர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

அதன்போது, இந்தியர்கள் இருவரும் தம்மீதான குற்றச்சாட்டை மன்றில் ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்கள் இருவருக்கும் நீதிவான் தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.  #ராஜஸ்தான்  #தண்டம் #சுற்றுலா #யாழ்ப்பாணம்
மயூரப்பிரியன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More