Home இலங்கைசமன் ஏகநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகிறார்…

சமன் ஏகநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகிறார்…

by admin

பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க அரசு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளை முன்னிலையாகவுள்ளார். விவசாய அமைச்சின் கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நாளை (06) முன்னிலையாகவுள்ளார்.

பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். விவசாய அமைச்சின் கட்டிடம் குத்தகைக்கு பெறப்பட்டதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் பிரதமரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கும் போது தெரிவித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More