160
யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
Spread the love