அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பதவி நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜோன் போல்டனுக்கும் தமக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அதனால் அவரை பதவியிலிருந்து விலகுமாறு தான் கேட்டுக்கொண்டதன் பின்னர், அவர் தனது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அடுத்த வாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தான் விருப்பத்தின் பேரிலேயே பதவிவிலகியுள்ளதாக ஜோன் போல்டன் அறிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜோன் போல்டன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #அமெரிக்க #தேசியபாதுகாப்புஆலோசகர் #பதவிநீக்கம் #ஜோன் போல்டன்