154
யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் இன்றுமுதல் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தங்களது கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்பதால், பிரச்சினையை வெளிக்கொணரும் மும் முகமாக சுழற்சி முறையில் ஆரம்பித்துள்ளனர். பல்கலை முன்றலில் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. #யாழ் #பல்கலை #உண்ணாவிரதபோராட்டம்
மயூரப்பிரியன்
Spread the love