வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு காவல்துறை பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு குறித்த ஆணைக் குழு அறிவித்துள்ளது
திறைசேறியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காக முறைசாரா நியமனங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விவகாரம் குறித்த முறைப்பாட்டுக்கமைய தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரியவுக்கும் ஆணைக் குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. #சஜித்பிரேமதாச #ஜனாதிபதிவிசாரணைஆணைக்குழு #அறிவிப்பு