குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போராட்டக்காரர்களை நிறுத்தியிருக்காவிட்டால் நிகழ்வில் பங்கேற்றிருந்த முக்கிய பிரபுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என ராஜாங்க அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். வெற்றி திறைசேரியுடன் பாரியளவு கடன் சுமையுடன் சட்ட ரீதியாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை சில தரப்பினர் முடக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் இழிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீனத் தூதுவர் மற்றும் ஏனைய பிரபுக்களுக்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.