எல்.ஐ.சி. பணத்தை எடுத்து பா.ஜனதா அரசு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எல்.ஐ.சி. நிறுவனம், கடந்த இரண்டரை மாத காலத்தில் 57 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கைக்கு மற்றொரு பெயர் எல்.ஐ.சி.. அதனால்தான், மக்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எல்.ஐ.சி.யில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பா.ஜனதா அரசோ, அந்தப் பணத்தை எடுத்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இதனால் மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…
140
Spread the love
previous post