Home இலங்கைசுவிஸிற்கான இலங்கை தூதுவர் மன்னார் சென்றார்..

சுவிஸிற்கான இலங்கை தூதுவர் மன்னார் சென்றார்..

by admin

சுவிஸிற்கான இலங்கை தூதரகத்தின் புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ பயணத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று புதன் கிழமை (25)  சென்று  கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று புதன் கிழமை காலை மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சென்ற  தூதரகத்தின் தூதுவர்,  அதிகாரிகள் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் அரசியல் பிரிவிற்கான தலைமை பிரதிநி ஆகியோர் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இச் சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திகளின் நிலைப்பாடுகள், அரசியலின் நிலைப்பாடுகள்,  பொருளாதார நிலைப்பாடுகள் இநிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More