Home இலங்கைமட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது

மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது

by admin


மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 3 பேரைக் கைது செய்துள்ளாதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்; படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இடையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக வேட்டைக்கு சிறுவனுடன் சென்ற குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22, 20, 14 , வயதுடைய 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். #மட்டக்களப்பு  #துப்பாக்கி #சிறுவன்  #உயிரிழப்பு #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More