Home இலங்கை பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்து

பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்து

by admin


காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது, சட்டத்திற்கு முரணான விடயம் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதனையடுத்து இவ்வாறு பிணை உத்தரவை இரத்து செய்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இருவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #பூஜித்ஜயசுந்தர   #ஹேமசிறி #பிணை #இரத்து

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More