குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேறியவர்கள் அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரங்களில் உள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ள அதேவேளை யார் என்ன சொன்னாலும் தாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என துருக்கி ஜனாதிபதி எர்துவான் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துப்படையினர் நின்றனர். சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டது
எனினும் சிக்கலான நேரத்தில் அமெரிக்கா எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது #சிரியா #துருக்கி #தாக்குதல்