Home உலகம்சிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்

சிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்

by admin

குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.

அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் Nமுhதல்கள் நிறுத்தப்படும் எனவும் இந்நேரத்தில் துருக்கி எல்லையில் அமைப்பதாக கூறும் ‘பாதுகாப்பு மண்டலம்’ என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்குவதற்கு அமெரிக்கா உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஆயுதப்படை கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை என்னும் நிலையில் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயினில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரித்தானியாவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இந்த அரமப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இப்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தால் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது   #சிரியா #போர்நிறுத்தம் #துருக்கி #ஒப்புதல் #குர்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More