165
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிததுள்ளார். இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Spread the love