இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் கொள்கலன் பாரவூர்தியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரின் சடலங்களும்; சீனர்களுடையது என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் அதிகாலை ஈஸ்டர்ன் அவென்யூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் இந்த இறந்த உடல்கள் அடங்கிய கொள்கலன் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது
இதனையடுத்து குறித்த வாகனத்தின் சாரதியான 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பல்கேரியாவில் இருந்து வந்த இந்த வாகனம் ஹோலிஹெட் எனும் இடத்தின் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக எஸ்ஸெக்ஸ் காவலதுறை; அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்
இந்தநிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில் கொள்கலன் பாரவூர்தியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 39 உடல்களும் சீனர்களுடையது என தகவல் வெளிவந்துள்ளது. அவற்றில் 38 பெரியவர்கள், ஒரு இளவயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
இதேபோல ஜூன் 2000ல், சீனக் குடியேறிகள் 58 பேர் மூச்சுத் திணறி இறந்த நிலையில் டோவர் எனும் இடத்தில் கொள்கலன் பாரவூர்தி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #இங்கிலாந்தில் #கொள்கலன்பாரவூர்தி #உடல்கள் #சீனர்களுடையது