கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்ட 50 பல்கலைக்கழக மாணவர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
நேற்றையதினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, லோட்டஸ் சுற்று வட்டத்தில் பாரிய வாகனநெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதினால் அவர்களை கட்டுபடுத்துவதற்காக காவல்துறையினகர் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.
எனினும் மாணவர்கள் தொடர்ந்தும் கலைந்து செல்லாமையினால் காவல்துறையினர் மாணவர்களை கைதுசெய்திருந்தனர். இதன்போது மாணவர்கள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிக்கையையும் கிழிந்தெறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஆரப்;பாட்டத்தில் ஈடுப்பட்டமை, நீதி மன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டமை , தேர்தல் சட்டத்திட்டங்களை மீறி செயற்பட்டமை மற்றும் காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறுவிளைவித்தமை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட 50 மாணவர்களை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்தனர். இவர்களுள் மாணவி ஒருவரும், பிக்கு ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கைது #பல்கலைக்கழக #மாணவர்கள் #நீதிமன்றில்
Add Comment