159
மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒன்று கூட்டி இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் தனியார் விடுதியில் எதிர் வரும் 16 ஆம் திகதி இடம் பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
-இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்……
மக்களிடத்தில் இருந்து அவர்கள் எழுப்பிய பல விதமான கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக் கும் பதில் வழங்கும் வகையிலும், இத்தேர்தலிலே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அனுகு முறைகள் சம்மந்தமாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) நாங்கள் எடுத்த தீர்மானம் எப்படியான பின்னனியிலே எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விளக்கும் முகமாகவும் இந்த கூட்டம் இடம் பெற்றது.
மிகவும் சிறப்பாக இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் சட்டத்தரணிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பை செய்கின்ற போது மிக தெளிவாக கருத்தை தெரிவித்திருந்தோம்.
எங்களுடைய தீர்மானம் இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களிலே யார் தோற்க வேண்டும் என்பதனை அடிப்படையாக வைத்து எடுத்த தீர்மானமே தவிர மற்றவரோடு நாங்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததற்காக எடுத்த தீர்மானம் இல்லை.
இருவரிலே எவர் சிறந்தவர் அல்லது எவர் வெற்றி பெறக்கூடாது என்று எடுக்கப்பட்ட தீர்மானம்.நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு சரியான முறையில் திருப்திகரமான பதில் கொடுத்தார் என்பதன் அடிப்படையிலே அத்தீர்மானத்தை எடுக்கவில்லை.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு குறைபாடுகள் சம்மந்தமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல விடையங்களை செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதற்கான காரணங்களை வினவிய விடையங்கள், எதிர் காலத்தில் தமிழ் மக்களின் உரிமை சார் விடையங்கள் தொடர்பில் அவர்களின் இருப்பு,அபிவிருத்தி சம்மந்தமான விடையங்களையும் தொடர்பில் முன்னெடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். #மன்னார் #சுமந்திரன் #ஜனாதிபதிதேர்தல் #கூட்டமைப்பு
Spread the love