Home உலகம்பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…

பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…

by admin

பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்துள்ளனர். பங்களாதேசின் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகாங் சென்று கொண்டிருந்த புகையிரதமும் தலைநகர் தாகாவிற்கு சென்று கொண்டிருந்த புகையிரதமும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதியதில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புகையிரதங்களின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More