Home உலகம்ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….

ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….

by admin

ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஹொங்கொங்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பலமுறை வன்முறை வெடித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

போராட்டத்தின் போது, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்ததில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமையானது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் ஹொங்கொங்கின் வடகிழக்கு பகுதியில் சாய்வான் நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டபோது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இளைஞர் ஓரவர் மீது துப்பாகிககுண்டு பாய்ந்ததில் அவர் அந்த ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டம் தொடங்கிய நாள் முதல் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு காயம் அடைந்த 3-வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More