155
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ, பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love